சென்னையில் உள்ள கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவராக பாலாஜி என்பவர் பணிபுரித்து வந்த நிலையில் அவரை இன்று வட மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இந்த சம்பவத்திற்கு திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 வயதுடைய வட மாநில வாலிபர் ஒருவரை கைது செய்த நிலையில் அவர் தன் தாய்க்கு சரியான முறையில் அவர் சிகிச்சை வழங்காததால் கத்தியால் குத்தியதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பட்ட பகலில் அரங்கேறும் குற்றச்சாட்டுகள் சட்ட ஒழுங்கின் சீர்கேட்டையை காட்டுகிறது என்று எங்கள் செயற்குழு கூட்டத்தின் வாயிலாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியிருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பதை தினம் தினம் காட்டுகிறது. சென்னை கிண்டியில் உள்ள உயர் அரசு சிறப்பு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் உயிரைக் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது இது தமிழக அரசின் அலட்சியப் போக்கை மட்டுமே காட்டுகிறது.

காலநேரம் பாராமல் மக்கள் நலனுக்காக உழைக்கும் மருத்துவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தமிழகத்தில் நாள்தோறும் நிகழும் சட்ட ஒழுங்கு சீர்கேடுகள் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்து நிலையில் இனியாவது ஆட்சியில் இருப்பவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும். மேலும் இனியாவது மக்களை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆட்சியாளர்கள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.