கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் தடையை மீறி அருவிகளில் குளிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் சிக்கமளூர் பகுதியில் உள்ள சார்மதி அருவியல் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் சில வாலிபர்கள் தடையை மீறி இந்த அருவியல் குளித்துள்ளனர். அந்த சமயத்தில் அங்கு வந்த காவல்துறையினர் குளித்துக் கொண்டிருந்தவர்களின் உடைகளை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர். அதன் பின் வாலிபர்கள் ஓடோடி வந்து காவல்துறையினரிடம் இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என கூறி  கெஞ்சி கேட்டதோடு மன்னிப்பும் கோரினார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களின் உடைகளை வழங்கினர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.