ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் அதிரடி சம்பவங்கள் இடம்பெற்றன. அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 206 ரன்கள் இலக்கை நோக்கி ஓடிய டெல்லி அணிக்காக கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் அடித்ததார். பவர் பிளே ஓவர்களில் பும்ராவுக்கு எதிராகவே 9 பந்துகளில் 28 ரன்கள் குவித்த நாயர், 3 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் அடித்தார். ஆனால் 19-வது ஓவரில் 3 ரன் அவுட்கள் ஏற்பட்டு டெல்லி அணியின் ரன் சேஸ் திடீரென வீழ்ச்சி கண்டது.

 

இந்த ஆட்டத்தில், மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கருண் நாயர் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இரண்டாவது ரன் ஓடியபோது, நாயர் பும்ராவுடன் மோதிக் கொண்டார். இது தவறுதலாக நடந்ததாக இருந்தாலும், சூடான தருணத்தில் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக எதிர்த்தனர். மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சமாதானப்படுத்தும் முயற்சி மேற்கொண்டார். அதே சமயம், முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா புன்னகையுடன் அந்த காட்சியை ரசித்ததையும் காண முடிந்தது. 2022-க்கு பிறகு முதன்முறையாக ஐபிஎல் தொடரில் விளையாடிய நாயர், 7 ஆண்டுகளுக்குப் பிறகு அரைசதம் அடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.