டெல்லியில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலின் மூலம் தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆம் ஆத்மி கட்சியினர் பல வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முதியவர்களுக்கு இலவச மருத்துவ சேவை, பெண்களுக்கு மாதம் ரூ.2100, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு 10 லட்சம் வரை ஆயுள் காப்பீடு என வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஆம் ஆத்மி மீண்டும் ஆட்சி அமைத்தால் கோவில்களில் பணிபுரியும் பூசாரிகள், அச்சகர்கள் போன்றவர்களுக்கு மாதம்தோறும் மதிப்பூதியம் 18 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.