தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வலுப்பெற்றது‌. இதனால் வடகிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பகுதி நிலவியது. இந்நிலையில் தற்போது வடகிழக்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் குண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது. மேலும் அதன்படி சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, நாகை, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் கூண்டு எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் மேற்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் வருகிற 19 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.