
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, சேலம், தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், பெரம்பலூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளையும் 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.