கயல் சீரியலில் கயலுக்கு தங்கையாக நடிக்கும் நடிகை அபிநயா. இவருடைய திருமண பந்தம் குறித்தும், அவருக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பது குறித்தும் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார். அதாவது தற்போது இருக்கும் பெண்கள் ஒரு கட்டத்திற்கு மேல் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை. ஏனெனில் தொடர்ந்து தாய்ப்பால் கொடுக்கும் பொழுது அவர்களுடைய அழகு குறைந்து விடும் என்று நினைக்கிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில் நான் என்னுடைய குழந்தைக்கு அதிகமான தாய்ப்பால் கொடுத்தேன் என்று சொல்லும் பொழுது அந்த செய்தியாக சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது .அதாவது என்னுடைய குழந்தைக்கு நான் ஆறு மாத காலம் வரை தாயை பால் கொடுத்தேன் என்று ஓபனாக பேசியுள்ளார்.