பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு எதிர்த்து கடந்த வருடம் அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியதால் 1200 இஸ்ரேலியர்கள் இறந்துவிட்டனர். அதற்கு பலி வாங்குவதற்காக கடந்த 13 மாதமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 45 ஆயிரத்து 227 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் 70% பெண்களும், குழந்தைகளுமே ஆவர். இந்த நிலையில் வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் முகமது சையத் என்ற சிறுவன் தனது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தான்.

அந்த சிறுவனுக்கு ஏழு வயது ஆகிறது. அந்த சிறுவன் பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டை பயன்படுத்தி சுற்றி திரிந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் அந்த சிறுவன் பேசும் போது எனக்கு போலீஸ் ஆக வேண்டும் என ஆசை. எனது கை மற்றும் கால்கள் எனக்கு திரும்பி வரவேண்டும். மற்ற குழந்தைகளைப் போல விளையாட ஆசை என ஒரு வீடியோவில் பேசியுள்ளார். இந்த விவகாரம் துபாய் நாட்டின் இளவரசரு்ம் துணை பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது கவனத்திற்கு சென்றது. அவர் பாலஸ்தீனிய சிறுவன் முகமது சையத் ஷபானுக்கு செயற்கை உறுப்புகள் வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.