
நாடாளுமன்றத்தில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது ஆந்திரா மற்றும் பீகார் மாநிலத்திற்கு ஏராளமான அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த முறை பாஜக பெரும்பான்மையாக ஆட்சி அமைக்க போதிய இடங்களில் வெற்றி பெறாத நிலையில், ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.
இதன் காரணமாகத்தான் பீகார் மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் தாராளமாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக கட்சியின் மாநில துணைத் தலைவர் நாராயண திருப்பதி பட்ஜெட் பற்றி பேசி உள்ளார். அதாவது பீகார் மாநிலம் உண்மையிலேயே மிகவும் பின் தங்கிய பாதிக்கப்பட்ட மாநிலம். அதனால்தான் பாதிக்கப்பட்ட அந்த மாநிலத்திற்கு நிதி கொடுத்து இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.