திமுக கட்சியின் எம் பி கல்யாணசுந்தரம் கும்பகோணம் அருகே நடந்த ஒரு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட போது அவர் பேசிய விஷயம் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிய பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் போது எம்பி கல்யாணசுந்தரம் பேசியதாவது,

எல்லாத்துக்கும் அவசரப்படக்கூடாது. திருமணம் ஆகி 10 மாதங்கள் கழித்து தான் குழந்தை பிறக்கும். திருமணம் ஆன உடனே அல்லது திருமணத்திற்கு முன்பாக குழந்தை வேண்டும் என்றால் அது வேறு விதமாகத்தான் பிறக்கும். முன்கூட்டியே காதலித்த கர்ப்பமானால் திருமணத்தன்று குழந்தை பிறக்கும்.

அவசரப்படுவது மற்றும் கோபப்பட்டு பேசுவதால் நல்லது செய்ய வருபவர்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும். எனவே மக்களுக்கு தேவையானதை மட்டுமே செய்து கொடுக்க வேண்டுமே தவிர விதண்டாவாதம் செய்யக்கூடாது என்றார்.

மேலும் சமீபத்தில் அமைச்சர் பொன்முடி விலைமாது என பெண்களை குறிப்பிட்டதோடு உடலுறவை சைவம் மற்றும் வைணவம் என குறிப்பிட்டு பேசியது சர்ச்சையாக மாறிய நிலையில் தற்போது குழந்தை பிறப்பு குறித்து திமுக கட்சியின் எம்பி இப்படி பேசியது மீண்டும் சர்ச்சையாக மாறியுள்ளது.