
கர்நாடகா மாநிலம் பெலகாவியின் ஹொன்னிஹாலில் இருக்கும் திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானமானது தரை இறங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த பயிற்சி விமானம் தரை இறங்கியது .
இதனிடையே விமானத்தில் இருந்த பயிற்சி விமானி உட்பட இரண்டு பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது பயிற்சி விமானத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.