டெல்லி ஷஹாபாத் பகுதியில் 16 வயது சிறுமியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 20 முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு கல்லை எடுத்து சிறுமியின் தலையில் போட்டுவிட்டு தப்பிய நபரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், கொலையாளியை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் 16 வயது பெண்ணை வெட்டவெளியில் கொலை செய்த நபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “3 வருடங்களாக நாங்கள் காதலித்து வந்தோம். அவருக்காக நிறைய செலவு செய்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன் திடீரென மீண்டும் முன்னாள் காதலனுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். நான் பேச முயற்சிக்கும் போதெல்லாம் முன்னாள் காதலன் வந்து என்னை மிரட்டுகிறான். அதனால் கொலை செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.