
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ராகுலுக்கும் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே அந்த சிறுமி யுவராஜ் என்பவரை காதலித்து வந்தார்.
திருமணத்திற்கு பிறகும் சிறுமி யுவராஜுடன் பேசியுள்ளார். ஒரு கட்டத்தில் சிறுமியும் யுவராஜும் இணைந்து ராகுலை கொலை செய்ய திட்டம் போட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ராகுலுடன் பைக்கில் சென்ற சிறுமி செருப்பு கழன்றுவிட்டதாக கூறி பைக்கை நிறுத்தியுள்ளார்.
அப்போது திடீரென வந்த யுவராஜின் நண்பர்கள் ராகுலை பீர் பாட்டிலால் தாக்கி 36 முறை சரமாரியாக குத்தியுள்ளனர். ராகுல் ரத்த வெள்ளத்தில் இறந்ததும் சிறுமி வீடியோ கால் மூலம் யுவராஜுக்கு ராகுலின் சடலத்தை காட்டியுள்ளார்.
அதன் பிறகு ராகுல் உடலை முட்புதரில் வீசியுள்ளனர். இதுகுறித்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராகுலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 17 வயது சிறுமி, யுவராஜ் உள்பட 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.