ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கியமான வீரருமான டிராவிஸ் ஹெட், தற்போது ஒரு சிறிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் 567 ரன்கள் எடுத்து, 191.55 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடிய அவர், ஹைதராபாத் அணி 2024-ல் இறுதிப் போட்டிக்கு  செல்ல உதவியுள்ளார். இந்நிலையில் சமீபத்தில், ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் ஒரு ரசிகையின் செல்ஃபி கோரிக்கையை ட்ராவிஸ் ஹெட் நிராகரித்ததால் அதிக அகம்பாவம் காட்டினார்’ என குற்றச்சாட்டு அவர் மீது எழுந்துள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Zayn khan (@zayn_vloggs)

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலான நிலையில், ரசிகைகளிடையே கலவையான விமர்சனங்கள் எழுந்தன. சிலர் டிராவிஸ் ஹெட் மென்மையாகவே மறுத்ததாகவும், அவரது தனிப்பட்ட இடத்தை மதிக்க வேண்டியதுதான் எனவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். ஒரு நெட்டிசன் கூறியதாவது, “அவர் சமூகரீதியாக உள்ள மனநிலை இல்லாமல் இருக்கலாம்; அதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவங்க எல்லாம் மனிதர்கள்தானே!” என எழுதினார். இதற்கிடையே, டிராவிஸ் ஹெட் 2025 ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதில் அலன் போரர் மெடல் வென்றதோடு, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்துள்ளார் என்பதை ரசிகர்கள் நினைவுபடுத்தி அவரை ஆதரித்து வருகிறார்கள்.