சென்னையில் ரகு என்பவர் வசித்து வருகிறார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது மாந்திரீக தொழில் செய்து வருகிறார். இவர் தனியாக ஒரு யூடியூப் சேனல் தொடங்கி அதில் மாந்திரீகம் குறித்து பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார். அதன் பிறகு வீடியோவை பார்த்து ரகுவை அணுகுபவர்களிடம் google பே மூலமாக அவர் பண மோசடியும் செய்து வந்துள்ளார். அந்த வகையில் பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் கிருஷ்ணன் என்பவர் ரகுவுக்கு பணம் அனுப்பியுள்ளார்.

அதாவது மாந்திரீகம் மூலமாக அதே பகுதியைச் சேர்ந்த சிபி என்பவரை கொலை செய்ய ரகுவை நாடியுள்ளார். இதற்காக ஜிபே மூலமாக ரகுவுக்கு ரமேஷ் 21 லட்சம் ரூபாய் வரையில் அனுப்பியுள்ளார். இது பற்றி சிபிக்கு தெரிய வந்த நிலையில் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரகு மற்றும் ரமேஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.