
கிருஷ்ணகிரி மாவட்டம் பெருகணப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜ். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதியினருக்கு மனிஷ் (26) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் மனிஷுக்கும் பர்கூர் பகுதியில் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வந்தது. விடிந்தால் திருமணம் என்று இருந்த நிலையில் வரதராஜ் திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரதராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் திருமணத்தை நிறுத்த இருந்த நிலையில் மஞ்சுளா எனது கணவர் எப்போதும் மகனுக்கு கல்யாணம் செய்து வைக்க தான் ஆசைப்பட்டார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். திருமணத்தை நிறுத்த வேண்டாம் என கூறியுள்ளார். அதன் பிறகு ஊர் மக்களும் பஞ்சாயத்து தலைவர்களும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்திய பிறகு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்தனர். அதன்பிறகு வரதராஜுக்கு புதிய பட்டு வேஷ்டி, சட்டை அணிவித்து அவர் கையாலே தாலி எடுத்துக் கொடுக்க, மனிஷ் பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினார். அதன்பிறகு அவரது வரதராஜின் இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.