உத்திரப்பிரதேச மாநிலம் சோன்பதிரா மாவட்டத்தின் ராபர்ட்ச்கஞ்சில் அதிர்ச்சியூட்டும் மோசடி சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது மேட்ரிமோனியல் தளங்களின் மூலமாக அரசு வேலைபார்க்கும் பெண்களை திருமணம் செய்வதாக நம்பவைத்து, அவர்களிடம் கோடிக்கணக்கில் பணத்தை பறித்ததாக ராஜன் கெஹ்லோட் என்ற நபர் மீது புகார்கள் எழுந்துள்ளன. கடந்த  வெள்ளிக்கிழமை பிற்பகலில், இரு ஆசிரியர்கள் உட்பட மூன்று பெண்கள் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு, “அவர் எங்கள் கணவர்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஒரு பாதிக்கப்பட்ட பெண், சந்து கபீர் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஆவார். அவர் அளித்த புகாரில், ராஜன் கெஹ்லோட் தன்னை திருமணம் செய்து கொண்டு, தனது பெயரில் பல கடன்கள் எடுத்ததாகவும், பின்னர் அதே மாதிரி ஏற்கனவே 7 அல்லது 8 பெண்களிடம் மோசடி செய்திருந்தது தெரியவந்ததாகவும் கூறியுள்ளார். தற்போது அவர் முஷீன் காம்பசிட் பள்ளியில் பணிபுரியும் மற்றொரு ஆசிரியையுடன் வாழ்ந்து வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. போலீசார் கெஹ்லோட் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என கூடுதல் எஸ்பி காளு சிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by India News HD (@indianewshd)