
சென்னையில் அண்ணாநகர் டவரின் உச்சியில் ஏறிய ஒரு காவலர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். இந்தச் சம்பவம் அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. உடனடியாக தீயணைப்புத் துறையினர் மற்றும் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த காவலர், “காவல் ஆணையர் இங்கு வந்து எனது கோரிக்கையை கேட்க வேண்டும்; இல்லையெனில் மேலிருந்து குதித்து விடுவேன்” என மிரட்டினார்
இந்த பரபரப்பான சூழலில், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இரண்டரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு, அந்த காவலரை பாதுகாப்பாக மீட்டனர். விசாரணையில் அவரின் பெயர் பரீக் பாட்ஷா (25) என்றும், அவர் 3வது பட்டாலியனில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேட்ரோ ஸ்டேஷனில் பாதுகாப்புப் பொறுப்பில் இருந்த அவருக்கு ஏதோ மன அழுத்தம் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.