
மகாராஷ்டிரா மாநிலத்தின் சமாஜ்வாடி கட்சி தலைவர் எம்எல்ஏ அபு ஆஸ்மி. இவர் அவுரங்கசீப் ஒரு கொடூரமான ஆட்சியாளர் கிடையாது எனவும் ஒரு சிறந்த நிர்வாகி என்றும் பாராட்டினார். அதோடு அவருடைய ஆட்சியில் பல கோவில்கள் கட்டப்பட்டது என்றும் அவருடைய படையில் இந்துக்கள் பலர் தளபதிகளாக இருந்தனர் என்றும் கூறினார். இது சர்ச்சையாக மாறிய நிலையில் அவரை மகாராஷ்டிரா மாநில சட்டசபையில் இருந்து இடைநீக்கம் செய்தனர். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சட்டசபை நேரத்தில் அவர் பேசியதாவது, இதற்கு சமாஜ்வாதி கட்சி கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அந்த நபரை சமாஜ்வாடி கட்சியிலிருந்து நீக்கிவிட்டு உத்திரபிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வையுங்கள். அவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சத்ரபதி சிவாஜியின் பெருமையை சொன்னால் அதை நினைத்து பெருமைப்படாமல் அதை அவமானமாக கருதுபவரும் அவுரங்கசீப்மை தன்னுடைய முன்மாதிரியாக கொண்டிருப்பவருமான அவருக்கு நம் நாட்டில் இருக்க எந்த உரிமையும் இல்லை. நீங்கள் ஒருபுறம் மகா கும்பமேளாவை விமர்சிக்கிறீர்கள். மேலும் மறுபுறம் நாட்டின் பல கோவில்களை அழித்த அவுரங்கசீப் போன்றவர்களை புகழ்கிறீர்கள் என்று கூறினார்.