
பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தற்போது பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, நடிகைகள் க்யாரா அத்வானி, அஞ்சலி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் ராம்சரண் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்துள்ளார் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில் ஜனவரி 10ஆம் தேதி படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் தற்போது ட்ரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் அரசியல் மற்றும் ஆக்சன் காட்சிகள் என உருவாகியுள்ள நிலையில் எஸ் ஜே சூர்யா வில்லனாக மிரட்டியுள்ளார். சுமார் 350 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவான நிலையில் ஆந்திர அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ட்ரெய்லர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.