இந்தாண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பரில் நடைபெறும். இந்தியாவுக்கு போட்டியை நடத்தும் உரிமை உள்ளது. ஆனால் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஹாங்காங் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கிறது.

பிசிசிஐ நடத்தும் உரிமையைப் பெற்றிருந்தாலும், நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபியின் நிலைமையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் இந்தியா வர வாய்ப்பில்லை என்பதால், அது நடுநிலையான இடத்தைத் தேர்வு செய்யலாம்.  இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரை டி20 வடிவில் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்.