ஆசிய மகளிர் கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்ற நிலையில் நேற்று கடைசி போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதிய நிலையில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா அரை சதம் அடித்தார். இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இது இலங்கை அணி மகளிர் ஆசிய கோப்பை தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.