தமிழகத்தில் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்து இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மே 13 முதல் 17ஆம் தேதி வரை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.