கொல்கத்தா ஜல்பைகுரி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியிலுள்ள வாலிபரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இவர்கள் இருவரும் அடிக்கடி தனியாக பார்த்து பேசியும் வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவநாளன்று அந்த வாலிபர் சிறுமியை தனியாக வருமாறு அழைத்துள்ளார். அதன்படி சிறுமியும் காதலனை சந்திக்க தனியாக சென்றுள்ளார். பின்பு இருவரும் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றனர். அப்போது திடீரென சில நபர்கள் சிறுமியை வலுக்கட்டாயமாக பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அந்த வாலிபர் உட்பட 7 பேர் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அதோடு அவர்கள் சிறுமியை பாலியல் கொடுமை செய்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில், 4 சிறுவர்கள் உட்பட மொத்தம் 7 பேர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் காவல்துறையினர் இவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.