உத்தரபிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள ரசூல்பூர் கிராமத்தில், காதலியை சந்திக்க வந்த இளைஞர் ஒருவரை காதலியின் குடும்பத்தினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோஹனன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், அஜிதாபூரைச் சேர்ந்த ஜஸ்தகீர் என்ற இளைஞர், காதலியை நேரில் சந்திக்க காதலியின் வீட்டிற்குச் சென்ற போது, அவரை குடும்பத்தினர் பிடித்து கோபத்தில் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

மும்பையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஜஸ்தகீர், சொந்த கிராமமான அஜிதாபூருக்கு வந்து, அதன் பின்பு காதலியைச் சந்திக்க ரசூல்பூர் சென்றிருந்தார். அவரின் வருகை குறித்து தெரிந்த காதலியின் குடும்பத்தினர், அவரை இடைமறித்து கூர்மையான ஆயுதத்தால் தாக்கினர். இதில் அவரது கழுத்தில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டதுடன், சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் வீழ்ந்தார். உடனடியாக போலீசார் விரைந்து வந்து, அவரை அருகிலுள்ள மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, காயமடைந்த இளைஞரின் தந்தை மன்சூர், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காவல் கண்காணிப்பாளர் டாக்டர் துர்கேஷ் குமாரின் உத்தரவின் பேரில், சிஓ மதோகர் ராம் சிங் வழக்கை மேற்பார்வை செய்கிறார். ஒரு சந்தேஇதனால் க நபர் கைது செய்யப்பட்டுள்ளார், மேலும் மற்றொரு நபரை பிடிக்க சிறப்பு போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரம் பல மாதங்களாக நடந்து வந்ததாகவும், குடும்பத்தின் விரோதம் காரணமாகவே இந்த துயரச்சம்பவம் நடந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவுகின்றது.