கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்டத்தில் ‌ கங்கி பாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 50 வயது ஆகிறது. இவர் தன்னுடைய வீட்டில் செல்ல பிராணியாக பூனையை வளர்த்து வந்தார். இந்த பூனை திடீரென அவரை ஒருநாள் கடித்துவிட்டது. இதனால் அவருக்கு ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது பரிதாபமாக உயிரிழுந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக பூனை கடித்த நிலையில் அதற்காக அந்த பெண் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. இதன் காரணமாகத்தான் தற்போது ரேபிஸ் நோய் பாதிப்பினால் உயிரிழந்துள்ளார். ஏற்கனவே நாட்டில் சமீப காலமாக நாய் கடியால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. மேலும் அந்த வகையில் தற்போது பூனை கடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.