
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பனத்தூர் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற 29 வயது இளைஞர் வசித்து வருகிறார். இவர் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டாவது திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கேரளாவை சேர்ந்த புரோக்கர் அவருக்கு பெண் பார்த்து கொடுத்த நிலையில் ஒன்றரை பவுனில் நகை போட்டு அந்த பெண்ணை ராதாகிருஷ்ணன் திருமணம் செய்து கொண்டார். முதலிரவு அன்று மாதவிடாய் என்று கூறி நழுவியுள்ளார்.
மறுநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை அங்கு போகிறேன் என்று கூறி விட்டு கம்பு நீட்டி உள்ளார். இது குறித்து அளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணின் கணவர் தான் புரோக்கர் ஆக வந்து 80 ஆயிரம் ரூபாய் கமிஷன் பெற்றுக் கொண்டு தனது மனைவியை திருமணம் செய்து கொடுத்தது தெரியவந்தது. அதனைப் போலவே அவர் பலரை ஏமாற்றி இருக்கலாம் என்று போலீசார் கூறியுள்ளனர்.