மதுரை மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளநீர் சூழ்ந்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மதுரையில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது சோழவந்தான் அருகே மேல மட்டையான் என்ற கிராமத்தில் அழகர் என்பவர் வசித்து வந்துள்ளார்.

இவர் தன்னுடைய 4 வயது மகனுக்கு நீச்சல் பழகுவதற்காக கன்மாய்க்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு நீச்சல் பழகிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென ஆழமான பகுதியில் இருவரும் இறங்கிவிட்டனர். இதனால் நீரில் மூழ்கிய தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.