
ரஷ்ய நாட்டில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரில் Ksenia Vodyanitskaya என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு 21 வயது ஆகிறது. இந்த இளம் பெண்ணுக்கு சமீபத்தில் கிரில் (24) என்ற வாலிபருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில் உணவகத்திற்கு பார்ட்டிக்காக சென்றனர். அதன் பின் புதுமண தம்பதிகள் தங்கள் வீட்டிற்கு சென்ற நிலையில், மணமகள் திருமண புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது 160 அடி உயரத்தில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி ஜன்னல் வழியாக அவர் கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த அந்த வாலிபர் அதிர்ச்சியில் உறைந்தார். உடனடியாக அவர் அவசர உதவி நம்பருக்கு தொடர்பு கொண்டு தன் மனைவி கீழே விழுந்தது தொடர்பாக கூறினார். அதன் பின் அவர் கீழே சென்று பார்த்தபோது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். மேலும் திருமணம் ஆன அதே நாளிலேயே இரவில் இளம்பெண் உயிரிழந்தது உறவினர்கள் மத்தியிலும் நண்பர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.