அமெரிக்காவில் ஜேம்ஸ் மைக்கேல் சிலின் (64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரபலமான தொழிலதிபராவார். இவர் கடந்த 2000-ம் ஆண்டு முதல் தியேட்டர்களில் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்யும் நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில் அடுத்தடுத்து பல புதிய தொழில்களை தொடங்கினார். இவர் நியூயார்க்கில் உள்ள ஒரு ஆடம்பரமான சொகுசு ஹோட்டலில் தங்கி இருந்தார்.

இந்நிலையில் திடீரென தான் தங்கி இருந்த மாடியில் இருந்து நேற்று கீழே குதித்து ஜேம்ஸ் தற்கொலை செய்து கொண்டார். அவர் 20-வது மாடியிலிருந்து கீழே குதித்ததால் சம்பவ  இடத்திலேயே பரிதாபமாக துடிதடித்து உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.