
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியில் வசித்து வரும் செல்வராஜ் மனைவி மீனாட்சி (60) தன்னுடைய ஆடுகளை நேற்று வழக்கம்போல அந்த பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு மாலை நேரத்தில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஆண்டிபட்டி மற்றும் தேனி இடையே ரயில் தண்டவாளத்தை ஆடுகளுடன் அவர் கடக்க முயன்ற போது வேகமாக வந்த ஆய்வு ரயில் மீனாட்சி மீது மோதியது.
இந்த சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதேசமயம் தண்டவாளத்தில் நின்றிருந்த ஆறு ஆடுகளும் ரயிலில் அடிபட்டு இறந்தது. இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீனாட்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.