உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசியில் சஞ்சய் பாண்டே என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு அஞ்சு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது ‌. இந்த பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மாமியார் மற்றும் கணவர் செய்த கொடூரங்கள் தற்போது வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறியதாவது, என்னுடைய ஆடைகளை கிழித்து தலைகீழாக தொங்க விட்டார்கள்.

பின்னர் நெருப்பால் என்னுடைய உதடுகளை பொசிக்கினார்கள். இதனால் நான் தாங்க முடியாத வேதனையை அனுபவித்தேன் என்று கண்ணீர் மல்க கூறினார். மேலும் பக்கத்து வீட்டுக்காரர்கள் கொடுத்த சந்தேக புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.