அதிமுக கட்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட நிலையில் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்ட நிலையில் ஓ பன்னீர்செல்வம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் அம்மா ஆதரவாளர்கள்  அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலில் வெற்றி பெற செய்வோம் என்று கூறியுள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த கே பி முனுசாமியிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, அதிமுக விற்கும் ஓ பன்னீர்செல்வத்திற்கும் தொடர்பு கிடையாது. அவர் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதோடு நீதிமன்றம் வரை சென்ற கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டார்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அவருடைய கருத்துக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை கிடையாது. அதன்பிறகு விஜய் தற்போது கட்சி தொடங்கிய நிலையில்  தன்னுடைய தலைமையில் தேர்தலை சந்திக்கும் அவர் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணிக்கு பங்கு உண்டு என்று கூறியுள்ளார். அவர் தேர்தலை சந்திக்கும்போது அதில் உள்ள சிக்கல்கள் தெரியவரும். அப்போது தன்னுடைய எண்ணத்தை விஜய் மாற்றிக்கொள்வார். தற்போது விஜயுடன் கூட்டணி யார் என்பது குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கிறது. மேலும் ஓ பன்னீர்செல்வத்தின் ஆதரவாக இருந்த கேபி முனுசாமி 2022 அதிமுகவுக்கு சென்ற நிலையில் தற்போது அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.