
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ மற்றும் சென்னை அணிகள் மோதிய நிலையில் சென்னை அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரன் அவுட், ஸ்டெம்பிங் முறையில் அவுட், பேட்டிங் என அனைத்திலும் தோனி சிறப்பாக செயல்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் ஸ்டெம்பிங் அவுட் முறையில் 200 பேரை அவுட் ஆகிய வீரர் என்ற பெருமையையும் அதிக முறை ரன் அவுட் ஆக்கிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் தோனி 4 பவுண்டரி ஒரு சிக்சர் என 26 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் களத்தில் அதிரடியாக விளையாடிய தோனிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த விருதை வாங்கிய பிறகு தோனி எனக்கு எதற்காக ஆட்டநாயகன் விருதினை கொடுத்தார்கள் என்பது புரியவில்லை. இந்த போட்டியில் நூர் மிகவும் சிறப்பான முறையில் பந்து வீசினார் என்றார். அதாவது விக்கெட் எதுவும் எடுக்க விடிலும் நூர் 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் நேற்று ஆட்ட நாயகன் விருதினை தோனி வென்றதன் மூலம் 43 வயதில் அதாவது அதிக வயதுடைய வீரராக ஆட்டநாயகன் விருது வென்றவர் என்ற சாதனையையும் தோனி புரிந்துள்ளார்.