
வாடகை ஆட்டோக்கள் மீட்டர் பொருத்தப்பட்டு மீட்டரில் வரும் கட்டணத்தை மட்டும் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் கட்டணம் தங்களுக்கு கட்டுபடி ஆகாததால் பெட்ரோல் மற்றும் டீசல் விலைவாசியில் மீட்டர் கட்டண முறையை அமல்படுத்தினால் ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மீட்டர் பொருத்தப்படாத ஆட்டோக்கள் மற்றும் அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோ உரிமையாளர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.