
ஆப்பிரிக்காவில் உள்ள கெடாரப் மாநிலத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்யப்படுகிறது. பரந்து விரிந்த பகுதிகளில் மானாவாரி பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளிப்பதற்கு சிறிய ரக விமானங்களை உபயோகப்படுத்துகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை சிறிய ரக விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது விவசாய நிலப்பகுதியில் விமானம் தரை இறங்கியது. அதே நேரம் எதிரே ஒரு ஆட்டோ வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ரன்வெயில் வேகமாக சென்ற விமானம் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விவசாய தொழிலாளர்கள் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயம் அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த மூன்று பேருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.