
டிஎன்ஏ பிறழ்வுகளால் ஏற்படும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியே ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயை ஏற்படுத்துகிறது. டிஎன்ஏ பிறழ்வுகள் கேன்சர் செல்கள் அசாதாரணமாக வளர்வதற்கு காரணம். புரோஸ்டேட் சுரப்பியில் கட்டி உருவாகும் வரை இந்த செல்கள் சாதாரண செல்களை விட வேகமாக பிரிந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளில் ஏற்படும் Prostate புற்றுநோய்க்கு எதிராக புதிய மருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Rexigo என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தை Zydus Lifesciences நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. தினசரி எடுக்க வேண்டிய இந்த வாய்வழி உட்கொள்ளும் மருந்தின் விலை (மாதம்) 6,995 ரூபாயாகும். 2022-ம் ஆண்டு தரவுகளின்படி, இந்தியாவில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.