
ஆண்ட்ராய்டு செல்போன்கள் வைத்திருப்பவர்கள் தங்களுடைய செல்போனில் பாதுகாப்பு இணைப்புகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று இந்திய கணினி அவசரகால பதில் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 12, 12L, 13, 14 பதிப்புகளில் இயங்கும் செல்போனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதனால் போன்கள் ஹேக் செய்யப்படும் அபாயம் உள்ளது. எனவே ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் போன் செட்டிங்ஸில் சிஸ்டம் அப்டேட் ஆப்ஷனை தேர்வு செய்து அப்டேட் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.