
தமிழ் சினிமாவில் மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பிறகு விஜய், ரஜினி, உதயநிதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்த பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அதன்பிறகு ஹாலிவுட் சினிமாவிலும் நடிகை எமி ஜாக்சன் பிரபல நடிகை ஆவார்.

இவர் ஆண்ட்ரஸ் என்பவருடன் காதல் உறவிலிருந்து நிலையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். அதன் பிறகு எமி ஜாக்சன் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை எமி ஜாக்சன் தன் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் நடிகை எமி ஜாக்சனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.