நமது ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படம் முகவரி மற்றும் பிற தகவல்களை இலவசமாக புதுப்பிக்கலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் இலவச ஆதாரம் புதுப்பிப்புக்கான கால அவகாசத்தை டிசம்பர் 14ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. ஆதார் அட்டையில் இருக்கும் புகைப்படம், முகவரி, பெயர், பாலினம், பிறந்த தேதி, மொபைல் எண், மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றை இலவசமாக புதுப்பிக்கலாம்.

ஆதார் கார்டு புதுப்பிக்க ரேஷன் கார்டு, வாக்காளர் ஐடி, பாஸ்போர்ட் அல்லது முகவரி சான்று போன்ற ஆவணங்கள் தேவைப்படலாம். உங்கள் அருகில் இருக்கும் ஆதார் மையத்தை அணுகி விவரங்களை புதுப்பிக்கலாம். ஆப்லைன் புதுப்பிப்புகளுக்கு 50 ரூபாய் கட்டணம் விதிக்கப்படும். ஆன்லைன் மூலம் ஆதாரம் புதுப்பிக்க ஆதார் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். உங்கள் ஆதார் எண்ணை பயன்படுத்தினால் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பப்படும்.

அதனை உள்ளிடவும். நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விவரங்களை தேர்ந்தெடுத்து அதில் கேட்கும் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த கோப்பின் அளவு 2 MB-க்கும் குறைவாக JPEG, PNG அல்லது PDF வடிவத்தில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மதிப்பாய்வு செய்த பிறகு அந்த மாற்றங்களை சமர்ப்பிக்கவும். ஆன்லைனில் செய்யப்படும் புதுப்பிப்புகளுக்கு கட்டணம் கிடையாது.