இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதே சமயம் தனியார் வேலை மற்றும் அரசு வேலைகளுக்கும் ஆதார் எண் அவசியம் என நிலை உருவாகிவிட்டது. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டை எப்போதும் நாம் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும்.

உங்களின் ஆதார் விவரங்களை மாற்ற முயற்சித்தால் அதற்கு சரியான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால் தான் ஆதாரில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும். ஆனால் ஒரு சில நேரங்களில் ஆதாரை அப்டேட் செய்வதற்கு உங்களிடம் எந்த ஒரு ஆவணமும் இல்லை என்றால் நீங்கள் குடும்ப அடிப்படையில் ஆன ஆதார் அப்டேட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த புதிய முறையை தற்போது ஆதார் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில் இதன் மூலமாக ஆதார் கார்டில் முகவரியை புதுப்பிக்க குடும்ப தலைவரின் ஆதார் மட்டுமே போதுமானது. இதற்காக ஆதார் சேவை மையம் மூலமாக குடும்ப அடிப்படையில் ஆதார் அட்டை முகவரி புதுப்பிப்பை மேற்கொள்ள குடும்ப தலைவரின் கைரேகையை பயோமெட்ரி கட்டாயம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.