
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி 9 ஆண்டுகள் நிறைவை குறைக்கும் வகையில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள சென்ட்ரல் விஸ்டா எனப்படும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்று திறக்கப்பட உள்ளது. 970கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிலையில் நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்த பிரதமர் மோடி தமிழ்நாட்டை சேர்ந்த 21 ஆதீனங்கள் முன்னிலையில் செங்கோலை விழுந்து வணங்கினார்.