ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற 175 சட்டப்பேரவை, 25 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கியது. தொடக்கம் முதலே ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் அக்கட்சி ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

இதனிடையில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளரான அமைச்சர் ரோஜா நகரி சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.