
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் எண்ணப்பட்டது. அதன்படி ஆந்திராவில் 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் வருகின்ற ஜூன் 9-ம் தேதி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்கும் சந்திரபாபு நாயுடுவுக்கு தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதேபோல நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி தற்போது ஆந்திராவில் அதிக இடங்களை வென்ற ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆந்திராவில் தற்போது 2-வது பெரிய கட்சியாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.