
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஸ்ரீ ரெட்டி. இவர் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கிய புள்ளிகள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி இயக்குனர்களான கொரட்டல் சிவா, சேகர் மற்றும் தெலுங்கு நடிகர்கள் நானி, ராணாவின் தம்பி அபிராம், கதாசிரியர் கோனா வெங்கட் போன்றோர் தன்னிடம் தவறாக நடக்கிறார்கள் என புகார் அளித்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மந்திரிகள் லோகேஷ், அனிதா, துணை முதல் மந்திரி பவன் கல்யாண் ஆகியோர் பற்றி அவதூறு பேசி உள்ளார். இதனால் ஸ்ரீரெட்டி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.