கோயம்புத்தூர் மாவட்டத்தில் ராதா கிருஷ்ணன் (49) என்பவர் வசித்து வந்தார். இவர் கெம்பட்டி என்னும் பகுதியில் நகைக்கு பாலிஷ் போடும் கடை ஒன்று வைத்துள்ளார். இவருக்கு திருமணமாகி பிரேமா (42) என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளார்கள். இதனையடுத்து ராதா கிருஷ்ணன் தினமும் ஆன்லைன் மூலம் சூதாட்டம் விளையாடி  வந்துள்ளார்.

இந்த சூதாட்டத்தின் மூலம் இவருக்கு பணம் இழப்பீடு ஏற்பட்டது. அதன்பின் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்பதற்கு அவர் மேலும் கடன் வாங்கி விளையாடி வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் மீண்டும் பணத்தை இழந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்நிலையில் சம்பவ நாளன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதன்பின் அவரது மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது மயங்கி நிலையில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.