தேனி மாவட்டம் போடி அருகே ரங்கநாதபுரம் வஉசி நகர் பகுதியில் தனவந்தன் (26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதில் தனவந்தன் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதற்காக அவர் கடன் வாங்கியும் முதலீடு செய்துள்ள நிலையில் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு ரூ.53 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டது. அவரால் கடனை திரும்ப செலுத்த முடியாததால் தனவந்தன் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இதனால் நேற்று முன் தினம் அவர் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.