
நேபாளத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது மலைப்பாதையில் ஒரு ஸ்கார்பியோ எஸ்யூவி கார் சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த காரின் கதவு திறந்ததால் ஜன்னல் அருகே இருந்த பெண் சாலையில் விழுந்துவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இந்த கார் மலைப்பாதையில் வளைந்து செல்லும்போது திடீரென அந்த பெண் சாலையில் கீழே விழ அதிர்ஷ்டவசமாக மிகப்பெரிய காயம் இன்றி உயிர்த்தப்பினார்.
இவ்வளவு பெரிய விபத்தில் இருந்து அந்த பெண் உயிர் தப்பியது மிகவும் ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சிலர் ஓட்டுநரின் கவனக்குறைவு என்று கூறுகிறார்கள். அதே சமயத்தில் காரில் செல்லும்போது கதவு சரியாக பூட்டப்பட்டிருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சோதித்துப் பார்க்க வேண்டும் என ஒரு பயணி பதிவு செய்துள்ள நிலையில் சீட் பெல்ட் அணிவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை உரிய விதத்தில் கடைபிடித்து இருந்தாலே இந்த விபத்து நடந்திருக்காது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
View this post on Instagram