
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து உள்ளது. இந்த கும்பல் ஆன்லைனில் ரேட்டிங் கொடுத்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுகின்றனர். இதற்கு முதலில் சிறிதளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறி பின்னர் மொத்தமாக பணத்தை ஏமாற்றுக்கின்றனர்.
இதேபோன்று பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மக்கள் யாரும் வங்கி கணக்கு போன்ற விவரங்களை யாரிடமும் பகிரக்கூடாது என்று காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாபு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.
அதில் தற்போது ஆபாச படம் பார்த்ததாக கூறி பணம் பறிக்கின்ற மோசடி கும்பல் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, இந்த மோசடி கும்பல் முதலில் உங்களுக்கு மெயில் அனுப்புகின்றனர். அந்த மெயிலில் உங்களுடைய கம்ப்யூட்டர் ஐபி அட்ரஸ்-ஐ பயன்படுத்தி ஆபாச படம் பார்க்கப்பட்டிருக்கிறது.
அதுவும் குழந்தை சம்பந்தப்பட்ட ஆபாச படங்கள் பாத்திருப்பதாக கூறுகின்றனர். இதை சிபிஐ கண்டுபிடித்ததோடு உங்க மேல் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஆர் ஏ டபுள்யூ உங்களை வாட்ச் பண்ணுகிறது. எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் நீங்கள் இதற்கான விளக்கத்தை கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால் உங்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உங்களது பெர்சனல் அல்லது அலுவலக மெயில் ஐடி-க்கு அனுப்புவார்கள். நீங்கள் பதறிப் போய் அதற்கு ரிப்ளை செய்தால், மேலும் உங்களை பயமுறுத்தி உங்களிடம் இருந்து முதலில் 5 லட்சம் ரூபாய் கேட்பார்கள். அதன்பின் தொடர்ந்து மிரட்டி உங்களிடம் இருந்து அதிக பணம் பறிக்க இந்த கும்பல் முயற்சி செய்யும்எனவே இது போன்று யாராவது ஆபாச படம் பார்த்து இருக்கிறீர்கள், உங்கல் மீது வழக்கு இருக்கிறது என்று யாராவது அனுப். பினால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. இதேபோன்று மோசடி கும்பல் கையில் சிக்காமல் கவனமாக இருங்கள் என்று அந்த வீடியோவில் கூறியுள்ளார்.