
விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி ஓய்வு நேரங்களில் தன்னுடைய தாயாரின் மொபைல் போனை பயன்படுத்துவது வழக்கம். விடுமுறை தினங்களில் மொபைல் போனில் யூடியூப் பார்ப்பதன் மூலம் தனது நேரத்தை பொழுது போக்கியுள்ளார். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ்(22) என்பவர் அந்த சிறுமியுடன் பழகி வந்துள்ளார்.
அதோடு அந்த சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார். அந்த வீடியோக்களை சிறுமி பார்த்த நிலையில் அவரை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு அதனை தன்னுடைய செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை தனது நண்பரான சசிக்குமார்(24) என்பவருக்கும் அனுப்பி உள்ளார். அவரும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் இதனால் பயந்து போன சிறுமி ஒரு கட்டத்தில் நடந்த அனைத்து விஷயங்களையும் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார் விருதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் ராஜேஷ் மற்றும் சசிக்குமார் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.